பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூருவில், உள்ள மத்திய அரசின் விமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாகவும், பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தீக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
unknown nodeமேலும், ஃபோர்ஜ் மற்றும் ஃபவுண்டரி பிரிவில் அதன் கொட்டகைகளில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை எச்.ஏ.எல் உறுதிப்படுத்தியது. தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.