மும்பையில் மெகா பிளாக் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை ரயில் சேவை பாதிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பையில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் உபகாரணங்களை பராமரிப்பதற்காக மேற்கு ரயில்வே “மெகா பிளாக்” அறிவித்துள்ளது. இந்த தடையால் மும்பையின் மத்திய மற்றும் மேற்கு வழித்தடங்களில் நாளை ரயில் சேவைகள் பாதிக்கப்படும்.
போரிவ்லி மற்றும் கோரேகான் ரயில் நிலையங்களுக்கு இடையே, காலை 10:35 மணி முதல் 3:35 வரை பாதைகளில் ஐந்து மணிநேரம் தடைகள் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் பிரிவுகளில் 5 மற்றும் 6 வது பாதைகளுக்கு ஒரு தடையானது இயக்கபடும் என்றும் ஹார்பர் பாதையிலும் ஒரு தடை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் அனைவரும் அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.