செப். 7 முதல் டெல்லியில் மெட்ரோ சேவைகள்..டோக்கன்களுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள்!

Default Image

டெல்லியில் செப். 7 முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்றுடன் நிறைவடையும் நிலையில், மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவைகள், செப். 7- ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 22- ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள், செப். 7 முதல் தொடங்கும் என அம்மாநில போக்குவரத்துக்குத்துறை அமைச்சர் கைலாஷ் காகோல்ட் தெரிவித்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது கட்டாயம்:

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு வெப்பபரிசோதனை செய்யப்படும். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மீறுபவருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், மெட்ரோ நிலையத்திலும் சானிடைஸர் வைக்கப்படும்.

டோக்கன் கிடையாது:

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்படாது. அதற்கு பதில், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான டிக்கெட் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு நிலையத்திலும் ஸ்மார்ட் கார்டுகளை வாங்குவதற்கான வசதி இருக்கும். மேலும் அந்த ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்வதற்கான டிஜிட்டல் முறைகளும் செயல்படுத்தப்படும்.

மெட்ரோவில் சமூக இடைவேளை:

ரயிலில் பயணிக்கும் பயணிகள், ஒவ்வொரு பயணிகளுக்கு இடையில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். குறிப்பாக, இருக்கைகள் அமைக்கப்படும். பயணிகளை கண்காணிக்க, டெல்லி மெட்ரோ பணியாளர்கள், சிவில் பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள். மேலும், புதிய வழிகாட்டுதலின்படி, ரயிலில் உள்ள ஏர் கண்டிஷனர் (ஏசி) இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT