இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் உக்ரைன் அமைச்சர்.! அவர்கள் நாட்டிற்கு அழைப்பு.?

உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.

உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.

உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி, இந்திய வெளியுறவு இணையமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

உக்ரைனுக்கு உதவி :

இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடிக்கு , அவர்கள் நாட்டிற்கு (உக்ரைன்) வர அழைப்பு விடுக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், போரில் இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன் நாட்டிக்கரு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜி20 மாநாடு :

மேலும், தற்போது இந்தியா தலைமையில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் இந்த சந்திப்பின் போது, உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.