சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட ஜம்மு-காஷ்மீர் எம்எல்ஏ!

காஷ்மீர் சட்டப்பேரவையில் சுன்ஜவான் தீவிரவாத தாக்குதலை கண்டித்து,  பாகிஸ்தானுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பிய நிலையில், தேசிய மாநாட்டு கட்சி

காஷ்மீர் சட்டப்பேரவையில் சுன்ஜவான் தீவிரவாத தாக்குதலை கண்டித்து,  பாகிஸ்தானுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பிய நிலையில், தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ (MLA) ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீர் சட்டப்பேரவை சனிக்கிழமை காலையில் கூடியதும், சுன்ஜவான் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த, பாஜக எம்எல்ஏக்கள், பாகிஸ்தானை கண்டித்து முழக்கமிட்டனர். இதனால் அமளி உருவானதால் அவை அலுவல்கள் 15 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து அவை அலுவல்கள் தொடர்ந்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ அக்பர் லோனி (Akbar Lone) என்பவர், திடீரென பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டார்.

இதுகுறித்து பேசிய அக்பர் லோனி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தனது தனிப்பட்ட விருப்பம் என்றார். இதுபற்றி பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, தங்கள் கட்சி எம்எல்ஏவின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.