பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் வதந்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இது தொடர்பாக ராகுல்காந்தி அவரது ட்விட்டரில் ட்விட் ஒன்று போட்டுள்ளார். அதில் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாகவும், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதாரத்துக்கு இழைக்கப்பட்ட சேதம் ஆகியவற்றால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட கோபத்தை, மோடியும், அமித்ஷாவும் எதிர்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , அதனால்தான் அவர்கள் நமது அன்பை பிரிப்பதுடன், வெறுப்பினை பரப்புகிறார்கள் எனவும், ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் வெறுப்புணர்வின் பின்னால் இருவரும் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
unknown node