தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி.!

சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

சென்னையிலிருந்து மைசூர் வரை செல்லும் நாட்டின் 5 ஆவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுரு கே.எஸ்.ஆர். ரயில்வே நிலையத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன் முக்கிய அம்சங்களாவன,

கட்டணமாக 1,200 இலுருந்து 2,486 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் சென்னை-மைசூரு 500 கி.மீ தொலைவை 6 மணி 30 நிமிடம் எனவும், இடையில் பெங்களூரு மற்றும் காட்பாடி நிலையத்தில் இரண்டு நிறுத்தங்களில் நிற்கும் எனவும் சனிக்கிழமையிலிருந்து வழக்கம் போல் இயங்க ஆரம்பிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலுள்ள இன்டெக்ரல் கோச் பேக்டரி(Integral Coach Factory) இல் உருவாக்கப்பட்டது மற்றும் அட்வான்ஸ் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அனைத்து பெட்டிகளும் தானியங்கு கதவுகள் பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்  (GPS) உடன் கூடிய ஆடியோ மற்றும் விசுவல் பயணிகள் தகவல் பலகை மற்றும் வை-ஃபை பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 15,2019 ஆம் தேதி டெல்லி-கான்பூர்-அலகாபாத்-வாரணாசி வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

unknown node