நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக சமூக வலைத்தளமான ட்விட்டரில் மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவை கொண்டாடும் விதமாக#ModiSarkar2மற்றும்#ModiSwearingInஎன்ற ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.
unknown nodeunknown nodeஆனால் நேற்று ட்விட்டரில் நேட்டீசன்கள்#PrayForNesamaniஎன்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இந்தியா மற்றும் சென்னை ட்ரெண்டிங்கில் முதல் இடத்திலும் மற்றும் உலக அளவில்#Pray_For_Neasamaniட்ரெண்டானது.இது தொடர்பாக பல பிரபலங்களும் ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இன்று இதன் தொடர்ச்சியாக#Nesamaniஎன்ற ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்திய அளவிலும் உலக அளவிலும்#Nesamaniஎன்ற ஹாஸ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.ஆனால் மோடியின் பதவி ஏற்பு விழாவின் ஹாஸ்டேக் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.ஆனால் மோடியின் பதவி ஏற்பு விழாவின் ஹாஸ்டேக் உலக அளவில் 3 வது இடம் வரை ட்ரெண்டானது பின்னர் 7 வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.