பஞ்சாப் :அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது “பின்வாங்கு முரசறை” (Beating the Retreat) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் கூடுதல் விமரிசையுடன் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று, இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்புடன் தேசியக் கொடியை இறக்கினர்.
அப்பொழுது, ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியை உற்சாகமாக கண்டு, “வந்தே மாதரம்” மற்றும் “ஜெய்ஹிந்த்” போன்ற தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன, இது பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
unknown node2025 மே மாதத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் எல்லை மூடப்பட்டு, கொடியிறக்க நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், மே 20 முதல் இந்நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியது, மேலும் மே 21 முதல் பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
