,

எனது இறப்பை யாரும் மறக்க கூடாது.! நரகாசுரனின் விருப்பமும்.. தீபாவளி கொண்டாட்டங்களும்.! சிறு வரலாறு இதோ….

By

தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது பட்டாசு தான், அதற்கு அடுத்தபடியாக புது டிரஸ் மற்றும் பலகாரங்கள் தான். அதனினும் மேலாக  இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி திருவிழா மனதுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தை அள்ளி வீசுகிறது.

பொதுவாக தீபாவளி என்றால் தீபங்களின் ஒளி அல்லது தீப ஒளி என்று சொல்லப்படுவதுண்டு. தீபங்களை ஏற்றி அதன் மூலம் வீசும் ஒளியினால் தீமைகளை ஒழித்து கொண்டாடுவதே இந்த தீபாவளி பண்டிகை. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், மக்கள் தீபாவளியை கொண்டாடுவதற்கு ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை பிறந்த கதை பற்றி கொஞ்சம்  தெரிந்து கொள்வோம், புராண கதைகளின் படி, நரகாசுரன் எனும் அரக்கன் தனக்கு மரணமே நிகழக்கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் என் தாயின்(பூமாதேவி) மூலம் தான் இறக்க வேண்டும் என்றும் பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தான். ஆனால் அவன் செய்த தீங்குகளையும் அட்டூளியங்களையும் பொறுக்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அவன் பெற்றிருந்த வரம் பற்றி அறிந்த கிருஷ்ண பகவான்(திருமாலின் அவதாரம்), தன் மனைவி சத்தியபாமாவிடம்(பூமாதேவியின் அவதாரம்) இதைப்பற்றி சொல்லி நரகாசுரனை வதம் செய்ய வைக்கிறார்.

தன் தாயின் கையால் இறக்க நேரிட்ட  நரகாசுரன், நான் இறந்த இந்த நாளை மக்கள் மறந்து விடக்கூடாது. எல்லோரும் இந்த தினத்தை துன்பங்களை மறந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று தன் தாயிடம் வேண்டிக் கொண்டான். அந்த நாளையே நாம் இத்தனை வருடங்களாக தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடி வருகிறோம். இத்தகைய வரலாறு கொண்ட தீபாவளி பண்டிகையை நாம் வெடி வெடித்து, பலகாரங்கள் உண்டும் கொண்டாடுகிறோம்.

Dinasuvadu Media @2023