மனைவியின் 'இந்த' செயலும் கணவனுக்கு எதிரான கொடுமை தான்.! ம.பி உயர்நீதிமன்றம் கருத்து.!

மனைவி , கணவர் குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பது கணவனுக்கு எதிரான கொடுமை தான். - மத்திய பிரதேச நீதிமன்றம் கருத்து.

மனைவி , கணவர் குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பது கணவனுக்கு எதிரான கொடுமை தான். – மத்திய பிரதேச நீதிமன்றம் கருத்து.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண் தனது கணவருக்கும், குடும்ப நல தனக்கும் நீதிமன்றமானது விவாகரத்து வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி வீரேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஒரு தலையான தீர்ப்பு :

இந்த விசாரணையில் அந்த பெண்ணின் தரப்பு, தனது கணவர் தான் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்ததாகவும், குடும்ப நல நீதிமன்றமானது கணவர் தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு ஒருதலையாக தீர்ப்பு வழங்கியதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

குடும்பத்தாரை மதிக்கவில்லை :

இதற்கு பதில் அளிக்கும் விதமாக , கணவர் தரப்பு வாதிடுகையில், அந்த பெண் காவல்துறை உயர் அதிகாரியின் மகள் அவர் திருமணம் ஆன புதிதில் இருந்தே எங்களை என்னையும், எங்கள் குடும்பத்தாரையும் மதித்தது இல்லை. என்றும்,

அவமதிப்பு :

அந்தப் பெண், தற்பெருமை, திமிர், பிடிவாத குணம் கொண்டவர் என்றும், குறுகிய மனப்பான்மை கொண்டவர், பாசாங்கு கொண்டவர் என்றும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களை அவமதித்து வந்ததாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

இரு தரப்பு வாதங்கள் :

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, குடும்ப நீதிமன்றம், ஒவ்வொரு அம்சத்தையும் நன்கு ஆலோசித்து, மிக நீண்ட தீர்ப்பில், கணவன் மற்றும் அவரது சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பகமானவை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதே நேரத்தில் மனைவியின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்ற அமர்வு கூறியது.

கணவருக்கு எதிரான கொடுமை :

விசாரணையில், ‘ மனைவி, கணவரையும் அவரது முழு குடும்பத்தையும் அவமரியாதை செய்வதை காட்டுகிறது. குறுக்கு விசாரணையிலும் அந்த குற்றசாட்டு அப்படியே நிரூபணமானது. என்றும், மனைவி , கணவர் குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பது கணவனுக்கு எதிரான கொடுமை தான் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

உயர்நீதிமன்றம் கருத்து :

இதனை தொடர்ந்து குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட உயர்நீதிமன்றம் மறுக்கிறது என்று கூறி மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது.