கோவாவின் வடக்கு பகுதியில் நிர்வாண பார்ட்டி நடப்பதாகவும் ,இந்த பார்ட்டியில் 10-க்கும் மேற்பட்ட வெளிநாடு பெண்கள் மற்றும் இந்திய பெண்கள் கலந்து கொள்வதாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த பார்ட்டி எப்போது..? நடக்க போகிறது என்ற எந்த விபரங்கள் இல்லாமல் இருந்தது. இந்த போஸ்டர் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
unknown nodeஇதை தொடர்ந்து கோவா மகிளா காங்கிரஸ் தலைவர் கோட்டின்ஹோ , கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மனோகரும் இது போன்ற பார்ட்டி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனால் போலீசார் முழு தீவிர சோதனையில் களமிறங்கினர்.மேலும் போலீசார் கூறுகையில் , கோவாவில் இந்த விதமான நிர்வாண பார்ட்டியையும் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர்.