பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தற்போது, அந்த குழந்தையை மீட்கும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. சிவம் என்ற சிறுவனைக் காப்பாற்ற NDRF மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது.
சிவத்தின் தாயார், தான் வயலில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அங்கு தனது மகன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென கால் தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மருத்துவக் குழுக்களும் இடத்தில் உள்ளது எனவும், குழந்தையின் சத்தம் கேட்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மேலும், ஆழ்துளை குழந்தையை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பல மூத்த போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
unknown node