அடக்கடவுளே...மகளை கடித்த நாய் குட்டியை கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தை.! வைரலாகும் வீடியோ...

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நாய்க்குட்டியை ஒருவர் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி ரோடு பிஎஸ்-க்கு

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நாய்க்குட்டியை ஒருவர் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி ரோடு பிஎஸ்-க்கு உட்பட்ட ஹரிசங்கர் புரம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ அங்கிருந்த  கேமராவில் பதிவாகியுள்ளது.

நாய்க்குட்டியை அடித்துக் கொன்ற நபரின் பெயர் வீரேந்திர ஜா என அடையாளம் காணப்பட்டடுள்ளது. வீடியோவில்  நாய்க்குட்டியை இரக்கமின்றி குச்சியால் அடிப்பதைக் நீங்கள் காணலாம். அந்த நாய்க்குட்டி தனது மகளைக் கடித்ததால் தான் அதைக் கொன்றேன் என்றும் அந்த நபர் கூறுகிறார்.

unknown node

மேலும், இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதையடுத்து, குவாலியர் போலீசார், விலங்குகளை நேசிக்கும் நம்ரதா சக்சேனா அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிக்கு எதிராக வழக்குப்பதிவு பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட வீரேந்திர ஜா கொலையைத் தொடர்ந்து தலைமறைவாகியதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 429 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதைப்போல உத்தரபிரதேசத்தின் படவுன் மாவட்டத்தில், புதிதாகப் பிறந்த ஒன்பது நாய்க்குட்டிகளை ஒரு பெண் குளத்தில் வீசி கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.