கேதர்நாத்-ரான்சி க்கு மலைப்பயணம் ஏறும் போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் சுற்றுலாப்பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.
உத்தரகாண்ட மாநிலம், கேதர்நாத்திலிருந்து ரான்சிக்கு 10 பேர் கொண்ட சுற்றுலாப்பயணிகள் மலைப்பயணம்(ட்ரெக்கிங்) சென்றுள்ளனர். அவர்கள் மலை ஏறும் போது மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றும் பனிச்சரிவில் சிலர் சிக்கியுள்ளனர். பனிச்சரிவில் சிக்கியவர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் 2 பேரைத் தேடி வருகின்றனர். மேலும் அவர்களின் உடல்நிலை சரி இல்லாததால் மேற்கொண்டு மலைப்பயணத்தை தொடர முடியவில்லை. அவர்கள் கேதார்நாத்திலிருந்து 6 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
unknown node