இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

With one more case of omega-3 infection being confirmed in India, the number of cases has risen to 3.

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உருமாறி ஓமைக்ரான் எனும் வைரஸாக  ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே பெங்களூரில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குஜராத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஜிம்பாப்வே நாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர் எனவும், இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது இவருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மூன்று பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.