கனமழை காரணமாக 7 மாநிலங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்.!

பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு

heavy rain Orange Red alert

பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மிக கனமழை (204.4 மி.மீ.க்கு மேல்) பெய்யும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.