ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி : இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பம்!

The corona vaccine, developed by Oxford University in the UK, is being marketed in India by a serum company based in Pune, Maharashtra.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு ஊசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு ஊசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

இந்த நிறுவனம் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்துடன் விண்ணப்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்தியா, பிரேசில், பிரிட்டன் நாடுகளில் மேற்கொண்ட 4 ஆய்வுகளின் முடிவுகள் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாகியுள்ள தடுப்பூசி திறம்பட செயல்படும் நிறுவனம் அவர்கள் அளித்துள்ள விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

அந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது என்றும், மக்கள் தொகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மீது செலுத்தி, கொரானா வைரஸ் தடுப்பில் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.