8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்ய அரசைத் தூண்டியது எது? – ப.சிதம்பரம் கேள்வி

ஜிஎஸ்டி அமலானபோதே நானும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தோம், 8 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடைய தவறை உணர்ந்த மத்திய அரசை பாராட்டுகிறேன் ஏன்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

PChidhambaram - NirmalaSitaraman

டெல்லி :முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களை வரவேற்பதாகக் கூறியுள்ளார், ஆனால் இந்த முடிவை எடுக்க மத்திய அரசு 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது மிகவும் தாமதமானது என விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையி, 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் டெல்லியில் நடைபெற்றது. தற்போதைய 5%, 12%, 18%, மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு வரி அமைப்பு, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு அமைப்பாக எளிமைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து அவர்  தனது எக்ஸ்பதிவில், “8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை கசக்கி பிழிந்தார். இப்போது வரியை குறைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இதே மக்கள் தானே அதே 18% வரியை கட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்த 5% வரி பொருந்தும் என்றால் ஏன் இத்தனை ஆண்டுகள் அது பொருந்தவில்லை

மக்களிடம் இருந்த பணத்தை எல்லாம் வரியாக வசூலித்து இப்போதாவது அவர்களுடைய மனம் திருந்தி, அறிவு தெளிந்து தங்களுடைய தவறை திருத்திக் கொண்டதற்கு பாராட்டுகிறேன்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

unknown node