இன்று வெளியாகியுள்ள பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த ஊக்க வார்த்தைகளை பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் காலை வெளியாகியது. தேர்வு முடிவுகள் குறித்து பதட்டப்பட்டு மாணவர்கள் பலர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். […]
கடந்த 6 மாதத்தில் 11,568 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து 1,800 -க்கும் மேற்பட்டடோர் கைது செய்தததாக ஹரியானா போலீசார் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 11,568 கிலோ சட்டவிரோத போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததன் மூலம் ஹரியானா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி நாயகம் மனோஜ் யாதவா கூறுகையில், இந்த ஆண்டு, போதைப்பொருள் சட்டத்தின் கீழ் […]
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்து வந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.மேலும் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டு உள்ளார். பதவி பறிப்பு : இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் கெலாட், காங் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை திடீரென்று ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டிலேயே கூட்டினார்.ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் கொறடா மகேஷ் ஜோஷி […]
கொரோனாவால் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ள இந்த காலகட்டத்திலும் தலித் இன மக்களுக்கு எதிராக நடக்கக்கூடிய நீதிக்கேடுகளை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும் தலித் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளும் இந்த பேரிடர் காலத்தில் நடந்து வருகிறது என மக்கள் நீதி மையம் சார்பாக […]
தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சில சர்வதேச திட்டமிடப்பட்ட சேவைகள் ஒரு வழக்கு அடிப்படையில் அனுமதிக்கப்படலாம். நாட்டில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை ஜூலை-31 ஆம் தேதி வரை நிறுத்துவதாக விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ கடந்தது வெள்ளிக்கிழமை கூறியது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சில சர்வதேச திட்டமிடப்பட்ட சேவைகள் ஒரு வழக்கு அடிப்படையில் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச்-23 அன்று திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 2020 ஜூன்-15 வரை […]
இந்தியாவில் குறைந்தது 99 மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்ததாகவும் 1,300 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்களின் சதவீதத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும். கொரோனா நோயால் இறந்த மருத்துவர்களின் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 8 சதவீதமாகவும், மகாராஷ்டிராவின் சதவீதம் 20 ஆகவும் உள்ளது. 73 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐ.எம்.ஏ நேஷனல் கொரோனா தரவுகளின்படி, கொரோனா நோயால் […]
ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் மது மேலும் இவரை போல் அதே கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயதுடைய ஒரு பெண் , இந்த நிலையில் இவர்கள் இருவருக்கு மிடையே காதல் நிலவில் காதல் ஏற்பட்டுள்ளது மேலும் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை மது வெளியூருக்கு கடத்தி சென்றார் மேலும் கடத்தி சென்று […]
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்தால், அவர்களுக்கு ரூ. 5,000 நன்கொடையாக வழங்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பிளாஸ்மா சிகிச்சை என்ற முறை கொரோனாவை கட்டுப்படுத்தி நல்ல பலனை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் […]
மும்பை மற்றும் தானே உள்ளிட்ட கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, இந்த நிலையில் ராடார், செயற்கைக்கோள் படங்கள், கொங்கன் கடற்கரையில் தீவிரமான மேகச் செயல்பாட்டைக் காட்டுகின்றன. குறிப்பாக மும்பை மற்றும் தானேவில் மிக அதிக அளவிலான மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பை மற்றும் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
இறந்தவராக கருதப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை எடுக்க சென்ற டோனி தாமஸ், அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார். புகைப்பட கலைஞரான 43 வயதான டோனி தாமஸ், இறந்த சிவதாசனின் உடலை புகைப்படம் எடுப்பதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள போலீசாரிடம் அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக போலீசாருடன் இணைந்து இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் டோனி. இந்த நிலையில் சிவதாசனின் சடலத்தை புகைப்படம் எடுத்த போது அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார். […]
போர் ஆயுதங்களை அவசர தேவைக்கு 300 கோடி ரூபாய் வரை,கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவசர தேவைகளை சமாளிக்க ரூ. 300 கோடி வரை போர் ஆயுதங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 928 அதிகரித்துள்ளது. இந்நிலையில் […]
துணை முதல்வர் பதவியிலிருந்து தூக்கப்பட்ட சச்சின் பைலட் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு ராஜஸ்தான் சட்டசபை சபாநாயர் சி.பி.ஜோஷி, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்து வந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். மேலும் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டு உள்ளார்.இதனால் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,691,627 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 586,821 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 970,169 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24,929 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 613,735 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்,கடந்த 24 மணி […]
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அவதானிப்புகள் குறித்து ஏமாற்றத்தை தெரிவித்தார். மோசமான கடன்களில் முன்னோடியில்லாத வகையில் வங்கிகள் காணப் போவதாகவும், விரைவில் பிரச்சினை அங்கீகரிக்கப்பட்டால் அது சிறப்பாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் என்.சி.ஏ.இ.ஆர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் ராஜன் கூறுகையில், வங்கி சீர்திருத்தங்களுக்கு கியான் சங்கம் எவ்வளவு அருமையாக இருந்தது என்பதைப் பற்றி நிதியமைச்சர் பேசினார். ஆனால் […]
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய சென்றபோது, அப்போது பதுங்கி இருந்த ரவுடிகள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீசார் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்திற்கு பிறகு விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளும் தலைமறைவாகினர். அந்தச் சம்பவத்தில் 21 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதைத் தொடா்ந்து, கடந்த 9-ஆம் தேதி தலைமறைவாக இருந்த விகாஸ்துபேவை மத்திய […]
அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. அஸாம் மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள மொத்தம் 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 26 மாவட்டங்களில் சுமார் 36 லட்சம் பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, 4 மாவட்டங்களில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,606 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,75,640 ஆக அதிகரித்துள்ளது. இன்று 233 பேர் […]
கொரோனா சந்தேக நபரின் மருத்துவமனை ரசீது நேற்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, மருத்துவக் கல்வி அமைச்சர் கே சுதாகர் மற்றும் சுகாதார ஆணையர் பங்கஜ் குமார் பாண்டே ஆகியோர் இங்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்தனர் . ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஜூலை 13 தேதியில் உள்ள அந்த அறிக்கையில் ரூ. 9,09,000, வென்டிலேட்டர் செலவு ஒயிட்ஃபீல்டில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் வென்டிலேட்டருடன் ஐ.சி.யூ தனிமைப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்கு இந்த ரசீது வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்த கூற்றின்படி, […]
“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என முதல்வர் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவால் இதுவரை 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ கடக்கவுள்ளது. இதன்காரணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதற்கு மத்திய அரசும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான […]