மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,606 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,75,640 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 233 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,928 ஆக உயர்ந்துள்ளது. மேலும்3,606பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,11,801 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
unknown node