பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து மக்களுக்கும் விரைவாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியை எந்தெந்த வழிகளில் எடுத்துச் செல்லலாம் என மத்திய அரசு ஆலோசனை வந்த நிலையில், இது குறித்து ஏற்கனவே சரக்கு விமானம், ரயில் […]
அமிதாப்பச்சனின் குரலுடன் வரும் கொரோனா காலர் ட்யூனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை நீக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ராகேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை, நீதியின் நலனுக்காக மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் அத்தகைய சேவைக்கு பொருத்தமானவர் அல்ல, […]
306 கி.மீ தூர உடைய புதிய ரெவாரி-புதிய மதார் பிரிவை காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியின் போது, புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், அரியானா மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகிழ்ச்சியில் பிரதமர் மோடி […]
வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. அமெரிக்க அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ […]
உத்திர பிரதேச மாநிலத்தில், 35 வயதுடைய தனது கூட்டாளியை பண பிரச்சனை காரணமாக சுட்டு கொன்றவர் கைது. தற்போதைய காலகட்டத்தில் பணத்திற்காகவும், சொத்திற்காகவும் உடன் பிறந்த சகோதரர்களை கொலை செய்பவர்களே அதிகரித்து விட்ட நிலையில், நண்பன் மற்றும் விதி விளக்கா என்ன? உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் கூட்டாளிகளாக சேர்ந்து பணியாற்றிய ஒருவரை மற்றவர் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முர்ஷத்பூர் எனும் வனப்பகுதிக்கு தனது கூட்டாளி அடாய் முரத்பூரில் வசிக்கும் 35 வயதுடைய ஹேம்சந்த் […]
பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும்,பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் மையங்கள் […]
கோவின் எனப்படும் செயலி பிளே ஸ்டோரில் இருந்தாலும், அதிகாரப்பூர்வ செயலி இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே மக்கள் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தடுப்பூசியை வழங்குவதற்கு வசதியாக மத்திய அரசு கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளமானது தடுப்பூசி வழங்கும் […]
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, வரும் […]
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது அவசியம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் கொரோனா காரணமாக […]
வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 43 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு […]
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் 40 நாட்களுக்கு மேலாக கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழலிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் மழை காரணமாக இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மேலும், குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள டிராக்டர் பேரணிக்கு இது முன்னோட்டோம் என தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் […]
விவசாயிகள் நலன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு நிரந்தரமாக தீர்வு விரைவில் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் கூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்டமாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எதுவும் போராட்டத்துக்கு தீர்வாக அமையவில்லை. விவசாயிகள் நிரந்தரமாக இந்த […]
306 கி.மீ தூர உடைய புதிய ரெவாரி-புதிய மதார் பிரிவை 2021 இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியின் போது, புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், அரியானா மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து […]
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விதித்துள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், […]
ஜனவரி 8 முதல் 30-ஆம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் அந்நாட்டுக்கான விமான சேவையை இந்தியா நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்து.
டெல்லியில் கன்றுக்கட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். டெல்லி கிழக்கு பகுதியில் கன்று குட்டி ஒன்றை ஒருவர் அடிப்பது குறித்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த நிலையில் கிடந்த கன்றுக்குட்டியை காப்பாற்றி மருத்துவ பரிசோதனைக்காக அருகிலிருந்த சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை […]
ஹை மொபிலிட்டி வாகனங்களை தயாரிக்க ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஹை மொபிலிட்டி வாகனங்களை (High Mobility vehicles) தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 758 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் (BEML) பெற்றுள்ளது. ஹை மொபிலிட்டி வாகனம், கவச சண்டை வாகனங்கள், துருப்புக்கள், வெடிமருந்துகள் மற்றும் கடைகளை செயல்பாட்டு பகுதிகளில் தொலைதூர எடுத்து செல்ல, கடினமான நிலப்பரப்புகளுக்கு நகர்த்த இந்த வாகனம் உதவும் […]
மத்திய சுகாதாரத்துறை, பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நோயானது தொடர்ந்து பராவால் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை, பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் […]
கேரளாவில் உள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி விவசாயிகளுக்கு இழப்பீடாக 2 மாதங்களுக்கும் மேலான பறவைகளுக்கு தலா ரூ .200 மற்றும் 1 மாதத்திற்கும் குறைவான பறவைகளுக்கு தலா ரூ .100 வழங்கப்படும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் […]
இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்தம் 2.8 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் அடிக்கடி இணையதளம் தடைபடுவதால், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதாக “internetshutdowns.in” என்ற வலைத்தளம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 75 முறை இணையதள சேவைகளை நிறுத்தியதால், நாட்டில் […]