மகாராஷ்டிராவின் பண்டாராவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து குழந்தைகள் பலி. அதிகாலை 2 மணிக்கு பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் (எஸ்.என்.சி.யு) இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கோரவிபத்திலிருந்து ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக, ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை பற்றிய விரிவாக்கம் தொடரும் … Ten children died in a fire that broke out at Sick Newborn […]
16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் நிகழ்ச்சியான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு,வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும், அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது. தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு இன்று நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு முன் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டங்களைப் போலவே, மெய்நிகர் முறையில் மாநாடும் நடத்தப்படும். “தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றுதல்” என்பது […]
மேற்குவங்கம் மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். இன்று நடைபெற்ற 6-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை (கேஐஎஃப்எஃப்) துவக்கி வைத்த பின் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்துள்ளார். திரையரங்குகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் வழக்கமான சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் சரியாக பராமரிக்குமாறும் திரையரங்கு உரிமையாளர்களைக் அறிவுறுத்தியுள்ளார். […]
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டது. […]
விவசாய சங்க பிரநிதிகள், மேஜையில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற வாசகத்தை எழுத்துவைத்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களி திரும்பப்பெற வலியுறுத்தி கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடும் குளிர், மழை எதையும் பார்க்காமல் தொடர்ந்து 44-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகின்றனர். புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்த ஆதார விலையை உறுதிப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது […]
வங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முதலீட்டுகளில் ஒன்று வங்கி எஃப்.டி (நிலையான வைப்பு) ஆகும். இதை இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்று வங்கி எஃப்.டி.ஆனால் நிபுணர்களின் ஆலோசனையின் படி,வங்கி முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். ரூ .5 லட்சத்துக்கு மேல் பெற முடியாது : அண்மைக்காலமாக சில வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றன.ஆகவே ஒரு முதலீட்டாளர் ரூ.5 […]
கடந்தாண்டு கொரோனவால் மார்ச் முதல் ஜூலை வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது. அதற்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனாவும், ஊரடங்கும்: உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய நிலையில், பல நாடுகளில் யாரும் எதிர்பார்த்திடாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் விட்டுவைக்கவில்லை, இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பேருந்து, ரயில் சேவைகள் […]
புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை வாங்கிவிட்டீர்களா? அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. […]
வாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது. அது என்னவென்றால் ” WhatApp is updating its terms and privacy policy” என்ற வரிகள் உள்ளது. வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இதற்கு பயனாளர்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் […]
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய வகையான கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது.ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அந்தவகையில் உருமாறிய கொரோனா, இந்தியாவிலும் பரவதொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு , உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. அந்தவகையில் இன்று இதுவரை 82 பேருக்கு இந்த […]
உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு காகங்கள் உயிரிழந்த நிலையில், அது குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த பறவை காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வகை “A” வைரஸ்களால் ஏற்படும் […]
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் -7.7% ஆக வீழ்ச்சி காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வளர்ச்சியாக 4.2% ஆக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக நடப்பு 2020-21ல் பொருளாதார வளர்ச்சி -7.7% ஆக சரிவை சந்திக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி என தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. […]
வங்கிகளின் கட்டணமில்லா எண்ணைப் போன்ற போலியான மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒரு சமூக விரோத கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எச்சரிக்கை தேவை சமீபகாலமாக வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.வாடிக்கையாளர்களின் எண்ணிற்கு வங்கிகளிலிருந்து அழைப்பது போல் பேசி ஏடிம் யின் ரகசிய குறியீடுகளை பெற்று பணத்தை பறிக்கும் ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது.இந்த மாதிரியான மோசடி குறித்த எச்சரிக்கைகளை அரசு மற்றும் வங்கிகள் […]
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்த ஒத்திகை இன்று நடைபெற உள்ளது. ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டது.அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மற்றொரு ஒத்திகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி விநியோகிக்கும் திறன் […]
உலக முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவ தொடங்கி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். ஒரு வருடம் ஆகியும் கொரோனா வைரஸை முழுமையாக தடுப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இந்த கொரோனவால் இன்னும் சில தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. I have tested COVID positive […]
நாடு முழுவதும் JEE அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு […]
உ.பி.யில் 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – விசாரணைக்குச் சென்ற தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சர்ச்சைக் கருத்து. கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற 50 வயது பெண், பூசாரி உள்ளிட்ட இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு, கால்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 […]
ஒரு ஜோடி ஒன்றாக திருமணம் செய்துகொள்வதை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால், ஒரே மாப்பிள்ளை ஒரே நேரத்தில் இரண்டு மணப்பெண்களுடன் திருமணம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. இரண்டு பெண்கள் ஒரே இளைஞரை விரும்பியதால் அந்த இளைஞர் இருவரையும் மணந்தார். மணமகனின் பெயர் சாந்து , இரண்டு பெண்களும் பரஸ்பர ஒப்புதலால் சந்து இருவரையும் திருமணம் செய்துகொண்டார். சாந்து ஒரு விவசாயி. ஓராண்டுக்கு முன்பு சுந்தரி என்ற பெண்ணை காதலித்தார், பின்னர் அவரை தனது வீட்டிற்கு […]
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று பிற்பகல் தனக்கு நுரையீரலில் எரியும் உணர்வு இருப்பது காரணமாக செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சந்திரசேகர் ராவின் தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் எம்.வி.ராவ், நுரையீரல் நிபுணர் டாக்டர் நவ்னீத் சாகர் மற்றும் இருதயநோய் நிபுணர் டாக்டர் பிரமோத் குமார் ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் யஷோதா மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ, சி.டி […]
கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக பாரத் பயோடெக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.ஆகவே நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக பாரத் பயோடெக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.25,800 தன்னார்வர்களுக்கான சோதனை […]