மோடி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் : ஜூன் 17ஆம் தேதி தொடங்குகிறது

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.இதனையடுத்து  நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.இதனையடுத்து  நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில்  17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உதவியுடன் 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.மேலும் ஜுன் 19ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.