அதானி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பிக்களின் அமளிக்கு மத்தியில் பட்ஜெட் மசோதா 2023 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் மசோதா நிறைவேற்றம்:
அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு மத்தியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றினார். இந்நிலையில், மக்களவையின் அடுத்த அமர்வு, மார்ச் 27-ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், ஊழியர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், நிதிசார்ந்த விழிப்புணர்வை பராமரிக்கவும் ஓய்வூதிய முறை குறித்து நிதி செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து கொண்டார்.
இதற்கு முன்னதாக, ஜனநாயகம் குறித்த தனது நிலைப்பாட்டை ராகுல் காந்தி பேசுவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் அவகாசம் வழங்கக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா இன்றும் மீண்டும் தொடங்கியது. மேலும், கடும் அமளி காரணமாக தினமும் மக்களவை ஒத்திவைக்கப்ட்டு வருவதால், வருத்தம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, இனி மக்களவை கூட்டத்தை ஒழுங்காக நடத்த விரும்புவதாக கூறினார்.