கடந்த 2 நாட்களில் 7 முறை நிலநடுக்கம்.! அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் மக்கள் அச்சம்

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம்.

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம்.

அந்தமான் – நிகோபார் தீவுகளில் கடந்த 2  நாட்களில் 7வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்தமான்-நிகோபாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது, நேற்றிரவு 10.41 மணிக்கு கேம்பெல் கடற்கரையிலிருந்து 230 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியில் இருந்து 4.9, 3.9, 5.5, 4.1, 4.6, 5.3 என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.