சாமி சிலையை சேதப்படுத்தியதாக, மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அடித்த மக்கள் ..!

உத்தரப்பிரதேசத்தில், சாமி சிலையை சேதப்படுத்தியதாக, இளைஞர் ஒருவரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

உத்தரப்பிரதேசத்தில், சாமி சிலையை சேதப்படுத்தியதாக, இளைஞர் ஒருவரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

ஆக்ராவில் ஷாகஞ்ச் என்ற இடத்தில் அந்த நபரை, மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏதோ சொல்ல முயலும் இளைஞரை பேச விடாமல் சரமாரியாக அடித்த அந்த கும்பல், அங்கிருந்த சாமி சிலையை சேதப்படுத்தியதால் தாக்கியதாக கூறியது.

தாக்குதலுக்குள்ளான அந்த நபர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்று போலீசார் கூறியுள்ளனர்.