உத்தரபிரதேசத்தில் தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி.!

உத்தரபிரதேசத்தில் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின் படி, தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படாமல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தேவைக்கேற்ப கொரோனா சோதனை செய்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டது.
உத்தரபிரதேசத்தில் கொரோனா சோதனை செய்ய விரும்பும் மக்கள் இப்போது மாநிலத்தில் உள்ள தனியார் நோயியல் ஆய்வகங்களில் சோதனை செய்து கொள்ளலாம். அவர்களுக்கு இனி எந்த மருந்துகளும் தேவையில்லை, ஆனால் சோதனைக்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், நோயியல் ஆய்வகங்கள் வீடுகளிலிருந்து கொரோனா மாதிரிகளை சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக முறையான அரசாங்க உத்தரவு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், உத்தரபிரதேச சுகாதார அதிகாரிகளின் குழுவும் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியது.
.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025