விரைவில் முன்பதிவில்லா வந்தே பாரத் ரயிலை தயாரிக்க திட்டம்!

அந்த வகையில், இந்த ரயில் பெட்டிகளின் உட்புறம் நவீன தோற்றம் மற்றும் சிறந்த வசதிகளுடன் இந்த ரயிலின் இரு முனைகளிலும் பிரத்யேக இன்ஜின் இருக்கும், இதனால் வந்தே

Vande Bharat train

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அரை-அதிவேக ரயில் பெட்டியாகும். இந்த ரயில் அதிநவீன வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஐசிஎப் திட்டமிட்டுள்ளது. இதற்கு ‘வந்தே பாரத் சாதாரன்’ அல்லது ‘வந்தே அந்தியோதயா’ என்று பெயரிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரெயிலின் இரு முனைகளிலும் இரண்டு இன்ஜின்களுடன் கூடுதலாக எட்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மற்றும் 12 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் கொண்ட ஏசி அல்லாத ரயிலை இன்டெக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) விரைவில் வடிவமைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், இந்த ரயில் பெட்டிகளின் உட்புறம் நவீன தோற்றம் மற்றும் சிறந்த வசதிகளுடன் இந்த ரயிலின் இரு முனைகளிலும் பிரத்யேக இன்ஜின் இருக்கும், இதனால் வந்தே பாரத் ரயில்களைப் போல இரு திசைகளிலும் இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.