டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
unknown nodeஇது தொடர்பாக என்ஐஏ ஐஜி அலோக் மிட்டல் கூறுகையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பல இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் டெல்லியில் 6 உ.பி.,யில் 5 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள், பாதுகாப்பு சார்ந்த இடங்களை தாக்க திட்டமிட்டது தெரியவந்துள்ளது.