அதிகரிக்கும் கொரோனா: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

As the spread of corona in India is currently on the rise, Prime Minister Modi is in consultation with all state chief ministers via video.

இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கிய நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்துள்ள நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பிற மாநிலத்தை விட தமிழகத்தில் குறைந்துள்ளதாகவும், இதனால் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கூட்டம் முடிவடைந்த பின், மாலை 4:00 மணிக்கு சென்னையில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் உள்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து இந்தியளவில் கொரோனா பாதிப்பு குறித்தும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது குறித்து பேசவுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும், இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.