வீடியோ: ஜார்க்கண்டில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் மீது காவல்துறையினர் தடியடி..!

#WATCH | Jharkhand: Police lathi-charged girl students at Dhanbad collectorate where they gathered to protest before State Minister Banna Gupta on July 6. The

ஜார்க்கண்டில் தன்பாத் ஆட்சியர் அலுவலகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் மீது மாநில காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

ஜார்க்கண்ட்டில் அறிவிக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி தன்பத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

தன்பத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா இருப்பதை தெரிந்த மாணவர்கள் அமைச்சரை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியதால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

unknown node