ஆபாச வீடியோ விவகாரம் – கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா.!

Karnataka BJP minister Ramesh Jharkiholi has resigned amid allegations of pornography.

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அவருக்கு ஆசை காட்டி தவறு செய்ததாக கூறப்படும் பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது குற்றசாட்டு இருந்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வீடியோ அடங்கிய சிடி ஆதாரத்துடன், அங்குள்ள கப்பன் பூங்கா என்ற காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அதில் அவருக்கு நெருக்கமாக இருக்கும் வீடியோ படங்கள், செல்போனில் இருவரும் பேசிக் கொண்டதாக கூறப்படும் ஆடியோ பேச்சும் அடங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் எனவும் ரமேஷ் ஜர்ஹிகோலி தெரிவித்துள்ளார்.