#BREAKING: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு..!

The Supreme Court has said that the trial of the case against the three agricultural laws brought by the Central will take place next Monday

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 11 )நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் எம்எல் ஷர்மா உள்ளிட்டோரின் வழக்கு மீதான விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தலைமை நீதிபதி கவலை தெரிவித்தனர்.  வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இதுவரை மத்திய அரசுடன் நடைபெற்ற 7 கட்ட பேச்சு வார்த்ததை தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நாளை மறுநாள் நடைபெறள்ளது.