தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனின் முன்ஜாமீன் மனுவின் விசாரணையை கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், சுங்கத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைஅக்.23-ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிசிவசங்கரன்,முன்ஜாமீன் கோரி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தநிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அவரை வரும் 28-ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.