பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
லண்டனில் நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, இந்திய அரசின் சார்பாக இரங்கல் தெரிவிக்க உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி வியாழக்கிழமை காலமானார். இந்த நிலையில், மறைந்த எலிசபெத் ராணிக்கு வரும் 19-ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெற உள்ளது