16வது மக்களவை கலைப்பு !குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடிக்கு அறிவுறுத்தல் வழங்கினார். மேலும் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று  16வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.