இன்று கேரளா வருகிறார் பிரதமர் மோடி.! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கேரளாவுக்கு வருகை தருகிறார். அங்கு முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொச்சியில் 24-ஆம் தேதி (அதாவது) நாளை துவங்கி வைக்க

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கேரளாவுக்கு வருகை தருகிறார். அங்கு முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொச்சியில் 24-ஆம் தேதி (அதாவது) நாளை துவங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது, பாதுக்காப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே தான் இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. ஏற்கனவே,  பிரதமர் கேரளா வருகையை முன்னிட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கனக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று மாலை கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் கருடாவை அடைந்த பிறகு, பாரதீய ஜனதா கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட யுவம் 2023 மாநாட்டில் உரையாற்றுவதற்காக மோடி அந்நகரில் உள்ள தேவாரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட்ஸ் கல்லூரி மைதானத்திற்குச் செல்கிறார்.