பன்முகத்தன்மையில் ஓர் ஒற்றுமை.! சூப்பர் ஹிட் சினிமா பாடலை பகிர்ந்து பிரதமர் மோடி பெருமிதம்.!

பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கேசரியா எனும் ஹிந்தி பாடலை  ஒரு பாடகர் 5 மொழிகளில் பாடியதை பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கேசரியா எனும் ஹிந்தி பாடலை  ஒரு பாடகர் 5 மொழிகளில் பாடியதை பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் , ஆலியாபட் நடித்திருந்த பிரமாஸ்திரா படத்தில் கேசரியா எனும் பாடல் இடம் பெற்று இருந்தது. இந்த படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆனதால்,  கேசரியா பாடல் 5 மொழிகளில் பாடப்பட்டு இருக்கும்.

இந்த பாடலை ஸ்னேதீப் சிங் கல்சி என்பவர் 5 மொழிகளில் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி சிறிய வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அதில் பன்முகத்தன்மையில் ஓர் ஒற்றுமை என்பது போல பதிவிட்டு, பாடகர்  ஸ்னேதீப் சிங் கல்சியை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்திற்கு பிறகு பலரும் தங்கள் வாழ்த்துக்களை ஸ்னேதீப் சிங் கல்சிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் ஹிந்தியில் அர்ஜித் சிங் பாடியுள்ளார். 428 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதே போல தமிழ் வெர்சனை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

unknown node