ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.
விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார். இதையடுத்து லக்னோ விமான நிலையம் சென்றடைந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.
அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர்.
இதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.மேலும் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில் அயோத்தியில் உள்ள ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி வழிபாடு செய்தார் அதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலிளும் தரிசனம் செய்தார்.
unknown nodeunknown nodeunknown node