அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், இந்த அதிநவீன ரயில் இப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும் வசதியுடனும் பயணிக்க வழிவகை செய்யும். இது இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில் அசாமின் கவுகாத்திக்கும், மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ‘கவுகாத்தி ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவது தான் எங்களின் நோக்கம்’ என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதன் மூலம், இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும்
