சிவில் சர்வீஸ் தினம்: அரசு ஊழியர்களுடன் இன்று பிரதமர் மோடி உரை.!

பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசு ஊழியர்களிடையே உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசு ஊழியர்களிடையே உரையாற்றுகிறார்.

நாட்டில் பல்வேறு துறைகளில் இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 21ம் தேதி சிவில் சர்வீஸ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நடைபெற இருக்கும் 16வது ‘சிவில் சர்வீசஸ் தினத்தின்’ பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

unknown node

இந்நிகழ்ச்சி தேசிய தலைநகர் விக்யான் பவனில் உள்ள பிளீனரி ஹாலில், காலை 11  தொடங்கியது. அரசாங்க அறிக்கையின்படி, நிகழ்வின் முதல் உரையை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் காலை 11:10 மணிக்கு வழங்குவார். அதைத் தொடர்ந்து காலை 11.25 மணிக்கு பிரதமர் விருதுகளை வழங்குகிறார். பின்னர்,  காலை 11.40 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

unknown node

சாதாரண குடிமக்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் மாவட்டங்கள் மற்றும் அமைப்புகளால் செய்யப்படும் அசாதாரணமான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில் இவை நிறுவப்பட்டுள்ளன.