பிரதமர் நரேந்திர மோடி உரை!அதிரடியாக நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்

Prime Minister Narendra Modi's speech!

பிரதமரின் உரை குறித்து பதிலளிக்க தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று முன்தினம்  விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றது.

unknown node

குறிப்பாக தேர்தல் நேரத்தில் பிரதமர் ஆற்றிய உரை குறித்தும் எதிர்க்கட்சிகள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மிஷன் சக்தி திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர  மோடியின் உரை குறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

unknown node

இதன் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம்  ‘மிஷன் சக்தி’ குறித்த பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் பிரத்யேக அதிகாரிகள் குழுவை நியமித்து, அவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரதமரின் உரை உடனே ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில்  பிரதமரின் உரை குறித்து பதிலளிக்க தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.