பஞ்சாபில் பள்ளி,கல்லூரிகள் தேர்வுகள் குறித்து முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்.!

பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம் தேதி பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல்.
பஞ்சாப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 30ம் தேதி பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தகவல் தெரிவித்துள்ளார். ஜூன்-30ம் தேதிக்கு பின் மத்திய அரசு வெளியிடும் நெறிமுறைகள் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவுவதை 80% குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிர்த்துள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப்பில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது. .
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025