ஒடிசா ரயில் விபத்து : உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி அரசு.!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தகவல்கள் அறிய புதுச்சேரி அரசு உதவி எண்களை அறிவித்தது.

Featured image

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தகவல்கள் அறிய புதுச்சேரி அரசு உதவி எண்களை அறிவித்தது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தக்வல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே மேற்கு வங்க அரசு, தமிழக அரசு , ஒடிசா மாநில அரசு சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது புதுச்சேரி அரசும் உதவி எண்களை அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் பற்றி அறிய, விபத்து தொடர்பான வேறு ஏதேனு தகவல் பற்றி அறிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவசர எண்கள் –1070, 1077, 112.தொலைபேசி எண்கள் –0413-2251003, 2255996.