நாளை புதுச்சேரி எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு....!

Tomorrow at 10 am, the MLAs will be sworn in as caretaker Speaker.

நாளை காலை 10 மணிக்கு,எம்.எல்.ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

புதுச்சேரியில் கடந்த 7-ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள்  முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின் அவரது வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டார்.

இந்நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 23 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு நாளை காலை 9 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து, காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அரளி, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.