முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்று ஒருவாரமாகியும் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால் கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடிக்கிறது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நிதித்துறையை மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுக்க தயாராக இருந்தாலும் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, கர்நாடக துணை முதலமைச்சரான பரமேஸ்வரா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாருடன் பேச்சுவார்த்தையில் மேலிடத் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக விரைவில் சுமுகத்தீர்வு எட்டப்படும் என்று பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.