ஹரியானா விவசாயிகளுக்கு டெல்லியில் ராகுல்காந்தி தனது வீட்டில் விருந்து கொடுத்தார்.
ஹரியானா மாநிலத்தில் சோனிபட் நகரில் சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அப்பகுதி விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது அங்கு வயல் வெளியில் நாற்று நட்டும், டிராக்டர் ஒட்டியும் மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து அவர்களை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து இருந்தார். அதன் பெயரில் நேற்று டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தி இல்லத்திற்கு ஹரியானா பகுதி விவசாயிகள் வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அங்கு, ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது பெண் விவசாயிகள் சோனியா காந்தி, ப்ரியங்கா காந்தி உடன் பாட்டுப்பாடி ஆடி மகிழ்ந்தனர்.
unknown node