வயநாடு மக்களவை தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக, இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசுகையில் மோடி எனும் பெயர் பற்றி தவறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எம்பி பதவி சஸ்பெண்ட்:
2 வருட சிறை தண்டனை பெற்ற காரணத்தால், அவர் எம்பி பதவியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். இதனால், அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வயநாடு பயணம் :
இந்த சமயத்தில், பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல்காந்தி தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு இன்று வரவுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் பேரணியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.