இன்று அரசு பங்களாவை ஒப்படைக்கிறார் ராகுல் காந்தி.!

டெல்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்து காலி செய்துள்ள ராகுல் காந்தி, பங்களாவின் சாவியை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்கிறார்.

டெல்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்து காலி செய்துள்ள ராகுல் காந்தி, பங்களாவின் சாவியை மக்களவை செயலகத்திடம் இன்று ஒப்படைக்கிறார்.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் இவரது எம்பி பதவி பறிக்கப்பட்டதோடு, அவரது அரசு பங்களாவையும் காலி செய்யுமாறு கூறப்பட்டது.

unknown node

முன்னதாக, லோதி எஸ்டேட் பங்களாவை காலி செய்த அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா செய்தது போல், 12 துக்ளக் லேன் பங்களாவின் சாவியை ராகுல் காந்தி இன்று அதற்கு சம்பந்தப்பட்ட எஸ்டேட் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளார். இதனால், 20 ஆண்டுகளாக வசித்து வந்த பங்களாவில் இருந்து ராகுல் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

unknown node

ராகுல் காந்தி மனு தள்ளுபடி:

பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் செஷன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உறுதியாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

unknown node

இந்த நிலையில், அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.